கமல்ஹாசன் பட பாணியில் புதைக்கப்பட்டாரா கேரள மாணவி?

Report Print Fathima Fathima in இந்தியா

கேரளாவில் காணாமல் போன கல்லூரி மாணவி ஜேஸ்னா மரியா ஜேம்ஸ், பாபநாசம் பட பாணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜேஸ்னா மரியா ஜேம்ஸ்(வயது 20).

தன் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தனர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி முக்குத்தட்டு பேருந்து நிலையத்தில் கடைசியாக பார்க்கப்பட்டவர் காணாமல் போனார்.

இதன்பின்னர் தந்தை அளித்த புகாரின் பேரில் ஜேஸ்னாவை பொலிசார் தேடி வந்தனர்.

மூன்று மாதங்களுக்கும் மேலாக பொலிசார் விசாரணை நடத்திய நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் சிபிஐ விசாரணைக் கோரி ஜேஸ்னாவின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் ஜேஸ்னா மாயமாவதற்கு முன்பாக ஆண் நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பியது கண்டறியப்பட்டது.

மேலும் அவரது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ரத்தம் கறைந்த ஆடையை வைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் Enthayar என்ற ஊரில் ஜேஸ்னாவின் தந்தையின் மேற்பார்வையில் கட்டப்பட்ட இரண்டு அறை கொண்ட வீட்டில் ஜேஸ்னா புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

ஏழை மாணவர்களுக்காக தனியாக கல்லூரியின் சார்பில் கட்டப்பட்ட இந்த வீடு திடீரென யூலை 2017ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

சுவர்கள் பாதியளவு கட்டப்பட்ட நிலையில், குறிப்பிட்ட பகுதியில் மணல் மேடு பள்ளமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் சந்தேகிக்கின்றனர்.

மழையால் வீட்டின் மற்ற இடங்களில் சிறு புற்கள் முளைத்துள்ள போதும், அந்த இடத்தில் புற்கள் இல்லாதது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளதாம்.

இதனைதொடர்ந்து அப்பகுதியை தோண்டிப் பார்க்க பொலிசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்