கலைஞரே வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜு கலகல!

Report Print Vijay Amburore in இந்தியா

திமுக தலைவர் கலைஞரே இனி மீண்டு வந்தாலும் அதிமுக அரசை அசைக்கக்கூட முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் மாவட்டம் தோறும் நடத்தப்படும் காவிரிநதிநீர் உரிமை மீட்பு கூட்டம் மதுரை ஆரப்பாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினர்.

அப்பொழுது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்கி வந்தார். அவரை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் பன்னீர் செல்வமும் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், அதிமுக அரசை வீழ்த்த நினைத்தவர்கள் தற்போது வாய்மூடி மௌனியாகிவிட்டதாகவும், கலைஞரே மீண்டு வந்தாலும் ஆட்சியை அசைக்க கூட முடியாது எனவும் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்