மகனின் நிச்சயார்த்தத்திற்கு கோடிகளை கொட்டி செலவழித்த அம்பானி! எத்தனை கோடி தெரியுமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் திகதி அவர்களது ஆண்டலியா இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

5 அடுக்குமாடி கொண்ட சொகுசு மாளிகையான ஆண்டலியா, நிச்சயதார்ததத்திற்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நிச்சயதார்த்த விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்பதால் அம்பானி தனது மகனின் திருமணத்திற்கு கோடிக்கணக்கான பணத்தினை செலவிட உள்ளதா கூறப்படுகிறது.

தொழிலதிபர்கள் என்றாலே தங்களது வாரிசுகளின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்துவார்கள். Lakshmi Mittal Payal Bansal (240 கோடி) மற்றும் Gaurav Assomull (45 கோடி) ஆகிய தொழிலதிபர்களின் வாரிசுகளின் திருமண செலவுகள் ஒரு உதாரணம்.

இந்த வரிசையில் தற்போது முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார். திருமண நிச்சயதார்த்தத்திற்கு மட்டும் 1 லட்சம் ரூபாய் மதிப்பில் டிஜிட்டல் முறையில் பத்திரிகை தயார் செய்யப்பட்டிருந்ததா கூறப்படுகிறது.

நிச்சயத்திற்கான உணவுகள் பிரான்ஸ் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தன. ஆடம்பரமாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்திற்கு 5000 கோடி ரூபாயை அம்பானி செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தத்திற்கு இப்படி ஒரு ஆடம்பரமாக செலவு என்றால், டிசம்பரில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு இதன் இந்த செலவு அதிகரித்து ஆடம்பரமாக நடக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers