நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருநெல்வேலி மாவட்டத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய தம்பதியினர் தங்களது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முகம்மது- சாரல் பீவி தம்பதியினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக தங்கள் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

நிச்சயதார்த்தம் முடிந்த பின் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், அங்கேயே தங்கியிருந்து பின்னர் இன்று காலை வீடு திரும்பியுள்ளனர்.

வீட்டில் வந்து பார்த்த அவர்கள், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது, இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். அத்துடன் கைரேகைப் பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

இந்தக் கொள்ளையில் 180 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers