ஓடும் ரயிலில் தவறி விழுந்து தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்: துணிச்சலாக காப்பாற்றிய பொலிஸ்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளம் பெண்ணை பொலிசார் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் இரயில் ஒன்று புறப்பட்ட போது, அப்போது திடீரென்று இளம் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார்.

இதனால் நிலை தடுமாறிய அவர் ரயில் சக்கரத்தின் அருகே தடுமாறி கீழே விழுந்ததால், அவர் ரயிலின் வேகத்தினால் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஆர்.கே.மீனா சற்றும் யோசிக்காமல் அந்த பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்.

இது தொடர்பான காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

பெண் பயணியின் உயிரை சாமர்த்தியமாக காப்பாற்றிய காவலர் மீனாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers