8-ம் வகுப்பு படித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்த நபர்: வீடியோ வெளியானதால் பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

உத்தரபிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் 8-ம் வகுப்பு படித்தவர் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாம்லி நகரின் ஆர்யன் என்ற தனியார் மருத்துவமனையில் 8-ம் வகுப்பு மட்டுமே படித்தவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியானது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஆர்யன் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதன் உரிமையாளரான அர்ஜுன் நர்தேவ் மீது வழக்குப் பதிவாகி விசாரணை துவங்கி உள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் சுமார் 25 பேர் தவறான சிகிச்சையால் உயிர் இழந்தும் தமக்குள்ள அரசியல் செல்வாக்கால் நர்தேவ் தப்பி வந்தார். ஆனால், இந்தமுறை அவரது மருத்துவமனையின் செயல் வீடியோவாக வாட்ஸ்அப்பில் வெளியானதால். அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வீடியோ காட்சியில் இருந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர் மற்றும் அவர் போல் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளையும் தேடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்