அடுத்தவர் மனைவியை மணமகளாக்கிய குடும்பத்தினர்: திருமண மண்டபத்தில் ஷாக் சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

திருச்சி அருகே நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுக்க அதிகாரிகள் சிலர் திடீரென வருகை தந்ததால், அடுத்தவர் மனைவியை மணமகளாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மதுராபுரி நரிக்குறவர் காலனியை சேர்ந்த ஆனந்த்(25), அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன.

சிறுமிக்கு திருமணம் நடப்பதை அறிந்துகொண்டு சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், திருமணத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் அதனை இரு குடும்பத்தாரும் கண்டுகொள்ளாமல் தங்களது வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

காவல் துறை அதிகாரிகள் வருவதை கவனித்த குடும்பத்தினர், உடனடியாக சிறுமியை ஒரு வீட்டில் மறைத்து வைத்து விட்டு, உடனடியாக அதே காலனியை சேர்ந்த சுரேஷ் மனைவி கவுசல்யா (25) என்பவரை மணப்பெண் போல அலங்கரித்து மணமேடையில் அமர வைத்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், சிறுமிக்கு திருமணம் செய்வது தவறு. திருமணத்தை நிறுத்துங்கள் என கூறியுள்ளனர்.

இந்த பொண்ணுக்கு 25 வயது ஆகிறது. இது தான் உங்களுக்கு சின்ன பொண்ணா என இரு குடும்பத்தாரும் சாமர்த்தியமான பதிலை கொடுத்துள்ளனர்.

இதனால் குழம்பிப்போன பொலிசார், அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். இதற்கிடையில், அலங்காரம் கலைக்கப்பட்டிருந்த கோலத்தில் சிறுமி ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது சிறுமி நடந்தவற்றை விவரித்த உடன், ஆனந்தை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆனந்த் 3-வது திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆனந்தை கடுமையாக எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்