11 பேர் இறந்ததற்கு பின்னால் உள்ள சதி: குடும்பத்தின் மூத்த மகன் திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

டெல்லியில் 11 பேர் கொண்ட குடும்பம் இறந்ததற்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளதாக இறந்த குடும்பத்தை சேர்ந்த மூத்த மகன் கூறியுள்ளார்.

புராரி பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டில் இறந்து கிடந்தனர்.

வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதங்கள் மற்றும் டைரிகள் மூலம் அவர்கள் கடவுளை அடையவேண்டும் என்ற மூடநம்பிக்கையால் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த காரணத்தை இறந்த குடும்பத்தை சேர்ந்த மூத்த மகன் தினேஷ் சிங் மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், எங்கள் குடும்பத்தில் அனைவரும் நன்கு படித்தவர்கள், அவர்கள் மூடநம்பிக்கையால் தற்கொலை செய்திருக்க முடியாது.

அவர்கள் மரணத்துக்கு பின்னால் பெரிய சதி உள்ளது. என் சகோதரி மகள் பிரியங்காவுக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் ஆன நிலையில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

அதே போல மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்தது, அவர்கள் கடவுளுடன் சேர வேண்டும் என்று எப்போதும் கூறவில்லை.

குடும்பத்தார் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தான், ஆனால் அதற்காக இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்.

தற்கொலை செய்பவர்கள் கதவுகளை மூடி கொள்வார்கள், ஆனால் இவர்கள் இறக்கும்போது கதவுகள் திறந்திருந்தது.

மற்றவர்கள் கூறுவதை நம்பும் பொலிஸ் நாங்கள் கூறுவதை கேட்க மறுக்கிறார்கள்.

அவர்கள் மூடநம்பிக்கையால் தான் இறந்தார்கள் என்றால் அதற்கான பலமான ஆதாரத்தை பொலிஸ் எனக்கு தரவேண்டும்.

அப்படி இல்லையெனில் இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்