அழகு நிலையத்தில் அந்த தொழில்: வசமாக சிக்கிய சினிமா, தொலைக்காட்சி நடிகைகள்

Report Print Vijay Amburore in இந்தியா

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 15 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குருகிராமில் செக்டார் 29 பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மப்டியில் வாடிக்கையாளர் போல சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் இருவர், அங்கிருந்த ப்ரோக்கரிடம் அழகிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.

அதில் ஏராளமான சினிமா நடிகைகள், தொலைக்காட்சி நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட காவல்துறையினர், பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையில் வந்திருந்த இருவரும் காவலர்கள் என்பதை அறிந்திராத இரு பெண்கள், வழக்கம்போல காவலர்களையும் அறைக்கு அழைத்துள்ளனர். அதற்குள் தகவலறிந்து உள்ளே வந்த காவலர்கள், புரோக்கர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அறைகளில் இருந்த, தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பெண்கள், தென்கொரியாவை சேர்ந்த ஒரு பெண், மணிப்பூரை சேர்ந்த 5 பெண்கள், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 4 ஆண்கள் என 15 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாய்லாந்து பெண்களின் விசா காலாவதியாகிவிட்டதாகவும், சட்டவிரோதமாக அவர்கள் தங்கியிருப்பதையும் உறுதி செய்தனர். இதனையடுத்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்