11 பேர் தற்கொலை போல இன்னொரு சம்பவம்: கடவுளை சந்திக்க ஐவர் தற்கொலை செய்யும் வீடியோ... அதிர்ச்சி ப்ளாஷ்பேக்

Report Print Raju Raju in இந்தியா

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்ததை போலவே கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளை சந்திக்க போவதாக கூறி 5 பேர் கொண்ட குடும்பத்தார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் வைரலாகியுள்ளது.

புராரியில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சில தினங்களுக்கு முன்னர் இறந்து கிடந்தார்கள்.

சொர்க்கத்தையும் கடவுளையும் அடையபோவதாக கூறி தற்கொலை செய்ததாக பொலிசார் கூறினார்கள்.

இந்நிலையில் இதே போல கடந்த 2013-ல் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பமும் தற்கொலை செய்து கொண்டுள்ளது.

கன்ஞன்சிங் அவர் மனைவி நீலம், மகன் பிரத்யும், மகள் ரினி மற்றும் தம்பி தீப் ஆகியோருடன் வசித்து வந்தார்.

குடும்பத்தினர் அனைவரும் கடவுள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தனர்.

தொலைக்காட்சியில் கூட கடவுள் சம்மந்தமான நிகழ்ச்சிகளையே பார்ப்பார்கள்.

இந்நிலையில் சிவபெருமானை அடைய போவதாக கூறி ஐந்து பேரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

அதன்படி தாங்கள் தற்கொலை செய்வதை கன்ஞன்சிங் வீடியோவாக எடுத்தார்.

லட்டுவில் சயனைட் கலந்த கன்ஞன்சிங் அவரும் சாப்பிட்டு அனைவருக்கும் கொடுத்தார்.

இதையடுத்து ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்