11 பேர் தற்கொலை சம்பவத்தில் அதிரடி திருப்பம்.. இந்து பெண் சாமியார் கீதா கைது!

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக இந்து பெண் சாமியார் கீதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி புகாரி அருகே சாண்ட் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 1-ம் தேதியன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து போயினர்.

இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு மர்மங்கள் வெளிவர ஆரம்பித்தன.

வீட்டில் கிடைத்த பல்வேறு டைரி குறிப்புகளை கொண்டு அவர்கள் மூட நம்பிக்கையால் தான் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயிருந்தனர் என்பதை மட்டுமே பொலிஸார் கண்டறிந்தனர். ஆனால் அதன் பின்னால் யார் இருப்பது என்பதை கண்டறிய முடியாமல் திணறி வந்த நிலையில், கீதா மா என்ற இந்து பெண் சாமியார், நான் தான் தற்கொலைக்கு தூண்டினேன் என கூறி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து கீதாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புராரி வீட்டில் வேலை பார்த்த ஒப்பந்ததாரர் ஒருவரின் மகள்தான் கீதா. தந்தையின் மூலம் லலித் குடும்பத்திற்கு நெருக்கமான கீதா, தான் ஒரு மிகப்பெரிய சாமியார் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் குடும்பத்தில் தேவையற்ற மூட நம்பிக்கைகளை விதைத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேசிய கீதா, என் தந்தையின் உதவியினால் தான் அந்த வீடு கட்டப்பட்டது. அந்த வீட்டில் 11 குழாய்களை அமைக்க அறிவுறுத்தியதும் நான் தான். வீட்டில் ஏராளாமான கெட்ட ஆவிகள் இருந்தது. அதனை விரட்டுவதற்காகவே இந்த பூஜையை நடத்தினேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்