காதல் விவகாரத்தை மறைக்க ஆசிரியர் மீது மாணவி கொடுத்த அதிர்ச்சி புகார்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் காதல் விவகாரத்தை மறைக்க பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூரில் செயல்பட்டு வரும் தனியார் டூடோரியல் கல்லூரியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், அங்கிருக்கும் சுந்தரம் என்ற ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் உடனடியாக சுந்தரத்தின் வீட்டிற்கு சென்று அவர் வீட்டை அடித்து உடைத்ததுடன், சுந்தரத்தையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த பொலிசார் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்து சுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிரியர் மீது புகார் கொடுத்த 10 ஆம் வகுப்பு மாணவி , நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி கண்டதால் அங்குள்ள டூடோரியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

அப்போது அந்த மாணவிக்கும் அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இதன் காரணமாக இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர். இதைக் கண்ட சுந்தரம் படிக்கும் வயதில் இது எல்லாம் வேண்டாம், மீண்டும் ஒரு முறை இப்படி பார்த்தால் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று மாணவியை மிரட்டி அனுப்பியுள்ளார்.

ஆசிரியருக்கு காதல் விவகாரம் தெரிந்துவிட்டதால், எங்கே ஆசிரியர் தனது பெற்றோரிடம் உண்மையெல்லாம் சொல்லிவிடுவாறோ என்ற பயத்தில் ஆசிரியர் மீது மாணவி தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இதனால் மாணவியிடம் பெற்றோர்கள் துருவி துருவி விசாரிக்க கடைசியில் மாணவி இப்படி ஒரு பொய்யை கூறியுள்ளார்.

தாக்குதலுக்கான ஆளான ஆசிரியர் சுந்தரம் தற்போது சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்