11 பேர் மரணத்தில் மாங்கல்ய தோஷம் கழிக்க நடத்திய மரண வேள்வி: புதிய தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
408Shares
408Shares
lankasrimarket.com

டெல்லியின் புராரி பகுதியில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 200 பேரிடம் டெல்லி பொலிசார் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, இறந்தவர்களில் ஒருவரான 33 வயது பிரியங்கா பாட்டியாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் பொலிசார் 3 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும், சிசிடிவி காட்சிகளில் இவர்கள் தற்கொலை செய்வதற்காக நாற்காலியை வாங்கி சென்றதும், பாத் பூஜா குறித்த குறிப்புகள் வீட்டில் கிடைத்ததால், இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பாட்டியா குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ‘முக்தியடையும்’ நோக்கில் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

மேலும், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பிரியங்காவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதால்தான் திருமணம் நடைபெற காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

எனவே தோஷம் கழிப்பதற்காக இந்த தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்