பிஞ்சு குழந்தைகளை அடைத்து வைத்த பள்ளி நிர்வாகம்: கொந்தளித்த பெற்றோர்

Report Print Vijay Amburore in இந்தியா
42Shares
42Shares
lankasrimarket.com

தலைநகர் டெல்லியில் பள்ளிக்கட்டணம் செலுத்தாத பிஞ்சுக்குழந்தைகள் 16 பேரை பள்ளி நிர்வாகம் சிறையில் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் Chandni Chowk பகுதியில் செயல்பட்டு வருகிறது Rabia Girls Public School. இங்கு பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்து செல்வதற்காக, அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் அனைவரும் அழுது கொண்டிருப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து விசாரித்துள்ளனர்.

அப்பொழுது பள்ளிக்கட்டணம் செலுத்தாததால் பள்ளியில் உள்ள தனி அறை ஒன்றில் 16 குழந்தைகளும் 5 மணி நேரமாக சிறை வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் சரியான பதில் அளிக்காததால், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இச்சம்பம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்