தகாத உறவால் வந்த வினை: காவல்நிலைய வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்

Report Print Santhan in இந்தியா
357Shares
357Shares
lankasrimarket.com

தமிழகத்தில் காவல்நிலையத்திற்கு வெளியே வைத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா. 45 வயதான இவர் நேற்று மாலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த போது, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்து சுகுணாவை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

காவல்நிலைய வாசலிலே நடந்ததால், இது குறித்து பொலிசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், வாங்கூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருக்கும் இறந்து போன சுகுணா என்பவருக்கும் மறைமுகத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுரேந்திரன் மதுபோதையில் சுரேந்திரனின் வீட்டிற்கு சென்று, அங்கு அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

ஆனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால், உடனடியாக சுரேந்திரன் அங்கிருந்த கல்லை எடுத்து சுகுணாவை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்த 1000 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார்.

இதன் காரணமாகவே சுகுணா, சுரேந்திரன் மீது புகார் கொடுப்பதற்காக வந்த போது, அவரை கண்காணித்து சுரேந்திரன் பின் தொடர்ந்து இந்த சம்பவத்தை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்