500-க்கு 498 மதிப்பெண் எடுத்த மாணவி இன்று கொலையாளியாக மாறிய அதிர்ச்சி சம்பவம்! விசாரணையில் பகீர் தகவல்கள்

Report Print Santhan in இந்தியா
931Shares
931Shares
lankasrimarket.com

தமிழகத்தில் பத்தாம் வகுப்பில் 498 மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடம் பிடித்த பெண் கொலையாளியாக மாறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவருக்கு கர்ப்பகாம்பிகை என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் திகதி விஜயகுமார் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பொன்குடிக்காட்டிற்கு சென்று உறவினர்களை பார்த்துவிட்டு மனைவியை பார்க்க ஈரோடு திரும்பிய நிலையில் அவர் மாயமானார்.

எங்கு போனார்? என்ன ஆனார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காத காரணத்தினால் விஜயகுமாரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விஜயகுமாரை பொலிசார் தேடி வந்த நிலையில், திருச்சி, காவிரி ஆற்று கரையோரம் இளைஞர் ஒருவர் கத்திகுத்து காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பின் பொலிசார் இது காணமல் போன விஜயகுமாராக கூட இருக்கலாம் என்ற கோணத்தில், அவரின் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து இறந்தது விஜயகுமார் என்பதை அவரது தந்தை உறுதி செய்ததால், பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர் சென்னை பொறியியல் கல்லூரியில் சி.ஏ 2ம் ஆண்டு படித்து வரும் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த ஈஸ்வரி என்ற மாணவியுடன் பல முறை பேசியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், ஈஸ்வரி என்ற மாணவி நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கல்லூரிக்காக மின்சார ரயிலில் சென்ற போது, அவருக்கு விஜயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், விஜயகுமார் தனது அறைக்கு ஈஸ்வரியை அழைத்து சென்று காதலிப்பதாக கூறியுள்ளார்.

மாணவி ஈஸ்வரி காதலை ஏற்க மறுத்ததால், அவரை மடக்கி பிடித்த விஜயகுமார் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.

அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பல முறை மாணவியிடம் நெருக்கமாக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி இவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன் படி திருச்சியில் உள்ள கூலிப்படையிடம் தன் ஆண் நண்பர்களின் உதவியுடன் ரூபாய் 2 லட்சம் கொடுத்து அவரை தீர்த்து கட்டும் படி கூறியுள்ளார்.

இதற்காக ஈஸ்வரி அவரை காவிரி ஆற்றுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு தயாராக இருந்த கூலிப்படை விஜயகுமாரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

மாணவி ஈஸ்வரியும் அங்கிருந்து தப்பியுள்ளார்.

கொலை வழக்கில் கூலிப்படையினருடன் கைதாகியுள்ள மாணவி ஈஸ்வரி திருச்சி உறையூரில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தபோது 500-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்த அவர், மாநிலத்தில் இரண்டாவது மாணவியாகத் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவிக்கு எப்படி 2 லட்சம் ரூபாய் கிடைத்தது, இதற்கு பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்