கனவுகளில் மிதந்து ஒட்டல் அறையில் உல்லாசம்: சீரழியும் பள்ளி சிறுமிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் நவீன வசதிகளுடைய விடுதி ஒன்றில் 16 முதல் 17 வயதுடைய பள்ளி பருவ ஜோடிகள் உல்லாசமாக இருப்பதை பார்த்து பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த விடுதியில் இருந்து 3 ஜோடிகள் பொலிசாரிடம் சிக்கி கொண்டன. இதில் இரண்டு ஜோடிகள் 17 வயதை கடக்காத பள்ளி மாணவ, மாணவிகள்.

ஒரு ஜோடி தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் ஜோடி. பொலிஸ் விசாரணையில் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்ய இருப்பது தெரியவந்தது. மற்ற இரண்டு ஜோடிகளும் தாங்கள் முதல் முறையாக இப்படி வந்துள்ளோம். இனிமேல் படிப்பை தவிர வேறு தவறு எதுவும் செய்ய மாட்டோம் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளனர்.

இதையடுத்து இவர்களின் எதிர்காலம் கருதி பொலிசார் எச்சரித்து அனுப்பினர். படிக்க வேண்டிய பள்ளி பருவத்திலேயே காதலில் விழுந்து, கனவுகளில் மிதந்து வாழ்க்கையை இருட்டறையில் பலரும் துறந்து விடுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers