நீதிமன்ற வளாகத்திலே துஸ்பிரயோகம் செய்யயப்பட்ட பெண் வழக்கறிஞர்!

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையில், பெண் வழக்கறிஞர் ஒருவர் அவரது சீனியர் வழக்கறிஞரால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் தெற்கு பகுதியில் Sangam Vihar அருகே Saket court செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 14-ம் தேதியன்று, வழக்கு குறித்தது விவாதிக்க வேண்டும் எனது அறைக்கு கொஞ்சம் வர முடியுமா என 50 வயது சீனியர் வழக்கறிஞர், தனது ஜூனியரை அழைத்துள்ளார்.

இதனையடுத்து அவரது அறைக்கு சென்ற 32 வயதான பெண் வழக்கறிஞரிடம், ஆபாசமாக பேசியதோடு, மதுபானம் குடிக்குமாறும் சீனியர் வழக்கறிஞர் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் இதற்கு அந்த பெண் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்கவே, கட்டாயப்படுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். மேலும் வெளியில் சென்று இதுகுறித்து யாரிடமும் கூற கூடாது எனவும் அந்த பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து வெளியில் வந்த வழக்கறிஞர் கடந்த 15-ம் தேதியன்று காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனடிப்படையில் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்மந்தப்பட்ட பெண் வழக்கறிஞரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தனர்.

அங்கு அவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது குற்றவாளியை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்..

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers