கொடுமையின் உச்சக்கட்டம்: 7 ம் வகுப்பு மாணவியை 7 மாதமாக சீரழித்த 15 கயவர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

இச்சிறுமியை அக்குடியிருப்பின் காவலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் மற்ற சிலருக்கும் தெரியவர, அங்கு பணிபுரியும் லிப்ட் ஆஃப்ரேட்டர், பிளம்பர், வாயிற்காவலர் என மொத்தம் 15 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்தக் கொடுமை அச்சிறுமிக்கு நடந்துள்ளது. இதனால் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அச்சிறுமியின் தாயார் மருத்துவமனையில் கொண்டு போய் பரிசோதனை செய்துள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமை மற்றும் யார் இவ்வாறு செய்தார்கள் என்பதை சொல்ல கூடி முடியாத நிலையில் இச்சிறுமி உள்ளார். சிறுமியின் பேச்சை உணர்ந்து கொள்ளும் அவரது தாயார், அனைத்து உண்மைகளையும் கேட்டு அறிந்துள்ளார்.

சிறுமி அளித்த தகவலின் பேரில், 15 பேர் மீது அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் தாயார் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து உடனே அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்ட 3 பேரை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றம் உறுதியானால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...