11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக 16 பேர்... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் 11 வயது மாற்று திறனாளி சிறுமியை 7 மாதங்களாக 16 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை அயனாவரத்தில்350 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், குடும்பத்துடன் வசித்து வரும் 11 வயது சிறுமி, தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். காது கேட்கும் திறன் குறைபாடு கொண்ட சிறுமி தினமும் பள்ளி செல்வதற்காக அடுக்குமாடியில் உள்ள லிப்டினை பயன்படுத்தி வந்துள்ளார்.

அப்பொழுது ‘லிப்ட்’டை இயக்கும் 4 ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் அதனை தவறாக பயன்படுத்திக்கொண்ட ஊழியர்கள், கத்தி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இதனை வெளியில் யாரிடமும் சொல்லிவிடக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.

இதற்கு பயந்துகொண்டு சிறுமி வெளியில் கூறாததை தெரிந்துகொண்ட 4 காமுகர்கள், சிறுமியை பொது கழிப்பறை, உடற்பயிற்சிக் கூடம், அடுக்குமாடி குடியிருப்பின் மாடி உள்ளிட்ட இடங்களுக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும், சிறுமிக்கு போதை மருந்தும், மதுவும் கொடுத்து குடியிருப்பின் எலக்ட்ரீசியன், பிளம்பர், செக்யூரிட்டி, ஹவுஸ் கீப்பர் பணி செய்வோர் என 16 பேரை அழைத்து 7 மாதங்களாக பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர்.

இதற்கிடையில் வயிற்று வழியால் அவதிப்பட்டு வந்த சிறுமி, வெளிமாநிலத்தில் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பிய தனது மூத்த சகோதரியிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டதில், பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், உடனடியாக சம்மந்தப்பட்ட 3 ஊழியர்களை பிடித்து அயனாவரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்,

1. சுரேஷ் (32) பிளம்பர், 2. அபிஷேக் (23) காவலாளி, 3. சுகுமாரன்(60) காவலாளி, 4. ரவிக்குமார்(64) லிப்ட் ஊழியர், 5. இரால் பிரகாஷ்(40) காவலாளி, 6. ராஜசேகர்(40) வீட்டு வேலைக்காரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மற்ற 10 பேரிடமும் தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers