மாமனாரை அடித்து கொன்ற மருமகள்: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவரை கத்தியால் குத்திய மனைவி இரண்டு நாட்கள் கழித்து மாமனாரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப். இவர் மனைவி ரோஜாலின்.

மூன்று நாட்களுக்கு முன்னர் சந்தீப்புக்கும், ரோஜாலினுக்கும் இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் கத்தியால் கணவரை ரோஜாலின் குத்தியுள்ளார்.

இதையடுத்து படுகாயமடைந்த சந்தீப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று ரோஜாலின் தனது மாமனார் சரத்துடன் வீட்டில் இருந்த நிலையில் அவருடன் வாய்தகறாறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ரோஜாலின் மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ரோஜாலினை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்