ஆபாச படம் பார்த்து அரக்கர்களாக மாறிய சிறுவர்கள்: நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் தொடர்ந்து ஆபாச படம் பார்த்த காரணத்தால் அதன் தூண்டுதலின் மூலம் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

டேராடூன் நகரில் உள்ள Sahaspur பகுதியை சேர்ந்த 9 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 5 பேர் சேர்ந்து தொடர்ந்து சில நாட்களாக தங்களது கைப்பேசியில் ஆபாச படம் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட இவர்கள், அச்சிறுமியை கண்காணித்த வண்ணம் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று அச்சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் இந்த 5 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாலியல் குற்றத்தின் அடிப்படையில் இச்சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியும் குணமடைந்து வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்