அந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: நடிகர் பார்த்திபன்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமி 17 பேரால் ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தைகள், சிறுமிகள் முதல் பாட்டி வரை பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன, திரையுலகினரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிறுமியை சீரழித்தவர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் என்று பார்த்திபன் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை கஸ்தூரி, அந்த 17 பேரும் ஆட்கள் இல்லை முகங்கள் இருக்கும் ஆணுறுப்புகள் என்கிறார்.

இந்த அவமானத்திலாவது தற்கொலை செய்து கொள்ளுங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

சிறுமியை சீரழித்த 17 பேரை தாக்கியது தவறு தான் என்றாலும் மக்களின் உணர்வு நியாயம் தான் என்கிறார் நடிகை குஷ்பு.

நடிகர் விஷால் செய்துள்ள டுவிட்டில், பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை எனும் சட்டம் கொண்டு வர இன்னும் எத்தனை பேரை இழக்க வேண்டும். சென்னை சிறுமி சம்பவம் அறிந்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers