திருமணமான பெண் மீது காதல்: இளைஞர் செய்த விபரீத செயல்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் ஏற்கனவே திருமணமான பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததால், பெண்ணின் கழுத்தை இளைஞர் ஒருவர் பிளேடால் அறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வருபவர் ராதிகா (36). திருமணமான ராதிகாவிற்கு அங்கு பெயின்ட் அடிக்க வந்த போரூரரை சேர்ந்த லோகேஸ்வரன் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் லோகேஸ்வரனுக்கு, ராதிகாவை மிகவும் பிடித்து போயுள்ளது. ஆனால் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என கூறி ராதிகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இருப்பினும் தொடர்ந்து லோகேஸ்வரன் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் ராதிகா எந்தவித இரக்கமும் காட்டாமல் தன்னுடைய வார்த்தையில் தெளிவாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் மறைத்து வைத்திருந்த பிளேடால், ராதிகாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் மிதந்த ராதிகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்