வெளிநாடுகளுக்கு செல்ல இலங்கை தமிழர்கள் செய்யும் மோசடி செயல்: திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், குறிப்பாக இலங்கை தமிழர்கள் பலர் இந்திய குடிமகன் என பொய்யாக கூறும் போலி பாஸ்போர்டை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் இந்த கும்பலில் டிராவல் ஏஜெண்டுகள், உளவுத்துறை மற்றும் தபால் கணக்கு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய குற்றவியல் பிரிவு மூலம் தற்போது இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் இது தொடர்பாக பத்து பேரை பொலிசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்த கும்பலுக்கு ரூ.3 லிருந்து 5 லட்சம் வரை பணம் கொடுத்தால் வெளிநாட்டு குடிமகன்களுக்கு, இந்திய பாஸ்போர்ட் வழங்கப்படும்.

முருகன் மற்றும் தபால் ஊழியரான தனசேகரன் ஆகிய இருவர் கைதுக்கு பின்னரே இது தெரியவந்துள்ளது.

அதே போல போலியான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை மூலம் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்குகளை திறந்துள்ளனர்.

இந்த ஆவணங்கள் எல்லாம் பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

பின்னர் போலி முகவரியை சரிபார்க்க வரும் பொலிசாருக்கு லஞ்சம் கொடுத்துள்ளதும், பாஸ்போர்ட்டை விநியோகிக்க தபால்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் விடயம் நடந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்