புவனேஸ்வரியுடன் காதல் கொண்ட விஜயகாந்த்: நடந்த விபரீத சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இலவாசனுர் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் காதல் பிரச்சனையால் சண்டையிட்டுக்கொண்டதால் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் விஜயகாந்த் மற்றும் ஆசிரியை புவனேஸ்வரி ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்துள்ளனர். இதற்கிடையில் அதே பள்ளியில் பணியாற்றிய தமிழ் மகள் என்ற ஆசிரியை விஜய்காந்துடன் பழக ஆரம்பித்துள்ளார்.

இது புவேனேஸ்வரிக்கு பிடிக்காத காரணத்தால், கோபம் கொண்டு ஆசிரியை தமிழ் மகளுடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்டுள்ளார்.இதனை பள்ளி மாணவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆசிரியை புவனேஸ்வரியின் உறவினர்களும் பள்ளிக்கு வந்து சண்டையிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பள்ளிக்கு பொலிசார் வரழைக்கப்பட்டனர்.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமிக்கு இந்த தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

அவருடைய உத்தரவின் பேரில், விசாரணை நடத்தப்பட்டு 3 ஆசிரியர்களும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers