7 மாதம் கோமாவில் இருந்த தாய்க்கு, பிறந்ததும் உணர்வளித்த பச்சிளம் குழந்தை

Report Print Vijay Amburore in இந்தியா

கேரளாவில் 3 மாத கர்ப்பிணியாக இருந்தபொழுது கோமா நிலைக்கு சென்ற பெண், குழந்தை பிறந்தது முதல் மெல்ல மெல்ல குணமாகி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வழூவூரை சேர்ந்தவர் அனூப். இவரது மனைவி பெத்தனா 3 மாத கர்ப்பிணியாக இருந்த பொழுது, தடுமாறி கீழே விழுந்ததில் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் நினைவிழந்து படுத்த படுக்கையாகவே இருந்த பெத்தனாவை, பெரும் கவலையுடனே அனூப் கவனித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 14-ம் தேதியன்று பெத்தனாவிற்கு எல்வின் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்த குழந்தைக்கு பால் கொடுக்க முற்பட்டுள்ளனர். அப்பொழுது திடீரென பெத்தனாவின் முகத்தில் உணர்வுகள் தெரிவதை பார்த்து குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இதுகுறித்து அனூப் கூறுகையில், குழந்தை அழும்போதும், பால் குடிக்கும்போதும் பெத்தனாவின் முகத்தில் உணர்வுகள் தெரிவதும், குழந்தையை பார்த்து பெத்தனா சிரிக்கும்போதும், விரைவில் அவள் குணமடைந்துவிடுவாள் என்ற நம்பிக்கைக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்