4 ஆண்டுகளில் 84 நாடுகளை சுற்றிய நரேந்திர மோடி: எத்தனை கோடி செலவானது தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

இந்திய பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் அதன்மூலம், 1,484 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து இந்திய மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதன்படி மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி முதல் 2018ம் ஆண்டு ஜூன் 10ம் திகதி வரையிலான காலக்கட்டத்தில், 84 நாடுகளுக்குச் சென்று வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணங்களுக்காக 1,484 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து மோடி பயணித்த விமானங்களை பராமரிக்க மொத்தம் ரூ.1,088.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்