தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் வாக்குவாதம் சண்டையாக மாறியது! பெண்ணின் முகத்தில் அறைவிட்ட நபரின் வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியின் போது, பெண் வழக்கறிஞரை ஆண் பேச்சாளர் அடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

இஸ்லாம் மதத்தில் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால், மூன்று முறை தலாக், தலாக், தலாக் என்று கூறி வந்தனர். இதன் மூலம் இரு தம்பதிகளுக்கும் இடையே இருந்த உறவை முடித்துக்கொள்ளும் செயலில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய கணவர்களின் இந்த செயலால் பெண்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் முத்தலாக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பிரபல ஹிந்தி தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றது. அப்போது முத்தலாக்கிற்கு ஆதரவாக முப்தி இஜாஸ் அர்ஷத் காஸ்மி என்ற நபரும், அதை எதிர்த்து பரா பெயிஸ் என்ற பெண் வழக்கறிஞரும் பேசினர்.

அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பரா, காஸ்மியை கன்னத்தில் அறைந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத காஸ்மியும் பதிலுக்கு பராவை கடுமையாக தாக்கினார். இது தொடர்பான காட்சியை அந்த தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விவாதம் நடத்திய தனியார் தொலைக்காட்சி பொலிசாரிடம் புகார் அளித்ததால், இது குறித்து வழக்குப் பதிவு செய்து காஸ்மியை பொலிசார் கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்