தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்? திருமாவளவன் பகீர் தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும், பொதுமக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதன்போது பேசிய தொல்.திருமாவளவன், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் எட்டு வழி சாலை திட்டத்துக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை.

இருப்பினும் அரசு ஏழை மக்களின் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது, இந்த திட்டத்தால் அடுத்த 50 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி பெறும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

மக்களை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து போராடினால் கைது செய்கிறார்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

பிரதமர் மோடி தான் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டார் என்பது உண்மை, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மோடி ஆட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பது வேதனையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்