பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகர் ஹிதேஷ் பர்மர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தி மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹிதேஷ் பர்மர் (24) சொந்தமாக திரைப்படம் ஒன்றை எடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது வீட்டில் ஹிதேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹிதேஷின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார், அவர் எழுதியிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், சினிமா பைனான்சியர் ஒருவர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், தன் வாழ்வை முடித்து கொள்ள அவர் தான் காரணம் எனவும் எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், பைனான்சியரிடம் ஹிதேஷ் கடன் வாங்கியதும், கடனுக்கு அவரிடம் அதிக வட்டி வசூல் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்