திருமண ஆசை காட்டி பலரை ஏமாற்றிய தமிழ்ப்பட நடிகை விவகாரத்தில் முக்கிய திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா

திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய நடிகை சுருதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆடி போனா ஆவணி என்ற படத்தில் நடித்துள்ள நடிகை சுருதி இளைஞர்களிடம் திருமண ஆசை காட்டி, 88 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

உடந்தையாக இருந்த சுருதியின் தாய், வளர்ப்பு தந்தை, சகோதரர் ஆகியோரும் கைதாகினர்.

இந்நிலையில் சுருதி மற்றும் அவரது குடும்பத்தினர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர். கோவை மத்திய சிறையில் இருந்து அவர் நேற்று முந்தினம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தினமும் கோர்ட் மற்றும் சைபர் கிரைம் பொலிசில் ஆஜராகி சுருதி கையெழுத்திட்டு வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்