யூடியூப் பிரசவத்தால் இறந்த கிருத்திகா: கொடூர செயலில் ஈடுபட்ட கணவரின் நிலை என்ன?

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த நிலையில் மனைவி உயிரிழந்ததால் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரில் கிரித்திகா என்பவருக்கு அவரின் கணவர் கார்த்திகேயேனும், நண்பர் பிரவீனும் சேர்ந்து பிரசவம் பார்த்ததில் கிரித்திகா உயிரிழந்தார்.

அதிக ரத்தபோக்கு ஏற்பட்டதன் காரணத்தால் கிரித்திகாவின் உயிர் பிரிந்தது.

ஆனால் கிரித்திகாவுக்கு பிறந்த பெண் குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த மோசமான செயலில் ஈடுபட்ட கிருத்திகா கணவர் கார்த்திகேயன், அவரது நண்பர் பிரவீன், லாவண்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்