29 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்: பலருக்கு கருக்கலைப்பு... திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

பீகாரில் அரசின் நிதியுதவியில் இயங்கும் தங்கும் விடுதியில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முசாபர்பூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 29 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது மருத்துவ அறிக்கையில் தெரிந்தது.

இதில் பல சிறுமிகளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டிருப்பதும், சிலருக்கு கரு உருவாகியுள்ளதும் உறுதியாகியுள்ளது.

இவ்விவகாரத்தில் மீதமுள்ள சிறுமிகள் குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகவுள்ள நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறுமிகளின் பட்டியல் அதிகரிக்கும் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் சில சிறுமிகள் கொலை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் பொலிசார் தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக விடுதி உள்ளே பொலிசார் தோதனை செய்த போது பூட்டிய அறை உள்ளே ஏராளமான எலும்புக்கூடுகள் இருந்துள்ளது.

இவையனைத்தும் மனித எலும்புக்கூடுகள் தான் என்பதை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேரை கைது செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்