கலைஞருக்கு மட்டும் தான் இப்படி இருக்கிறது: நிபுணரே வியந்த கதை

Report Print Fathima Fathima in இந்தியா

மூளையின் இரு பக்கங்களும் சிறப்பாக செயல்படும் ஓர் மனிதர் கருணாநிதி மட்டும் தான் என பிரபல நரம்பியல் நிபுணரான ராமமூர்த்தி வியப்புடன் ஒருமுறை தெரிவித்துள்ளார்.

பொதுவாக மனிதனின் மூளையின் செயல்பாடுகள் என்பது மூளையின் இடது மற்றும் வலது என இரண்டு பகுதிகளை அடிப்படையாக கொண்டு செயல்படுவது வழக்கம்.

மனித உடலின் குறிப்பிட்ட சில செயல்பாடுகள் மூளையின் இடது பக்கத்தாலும், வேறு சில செயல்பாடுகள் மூளையின் வலது பக்கத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன, அவற்றை பொறுத்தே நமது திறமைகளும் அமைகின்றன.

கருணாநிதியை பொறுத்தவரை சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள், திரைக்கதை, வசனங்கள், பாடல்கள் மற்றும் கார்ட்டூன் என எதையும் விட்டு வைத்ததில்லை.

இவை அனைத்தையும் அவர் ஆட்சி பொறுப்பில் இருக்கும் போதும் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்.

இதுகுறித்து பிரபல நரம்பியல் நிபுணரான ராமமூர்த்தி ஒருமுறை, ஆளும் திறமை என்பது இடது மூளை தொடர்பானது, அதேசமயம் காவியமும் கற்பனையும் வலது மூளை.

பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்று தான் மேன்மையாக இருக்கும், ஆனால் கலைஞருக்கு தான் இரண்டுமே மேன்மையாக செயல்படுகிறது என தெரிவித்தாராம்.

- Dina Mani

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்