பிரபல நடிகையை விசாரிக்க அழைத்துச் சென்று பொலிஸ் செய்த அதிர்ச்சி செயல்: ஜாமீனில் வெளிவந்து கதறல்

Report Print Santhan in இந்தியா

நடிகை சுருதி, தன்னை பாலியல்ரீதியாக காவல்துறை அதிகாரி துன்புறுத்தியதாகவும், நிர்பயாவை போல பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் போட்டு விடுவோம் என மிரட்டியதாகவும் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகிறார்;

பிரபல திரைப்பட நடிகையான சுருதி பாலியல் ரீதியாக பொலிசார் துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகை சுருதி. இவர் சுமார் ரூ.2 கோடிக்கு மேல் மோசடி புகார் செய்ததாக வளர்ப்பு தந்தை பிரசன்னா வெங்கடேசன், தாய் சித்ரா, சகோதரர் சுபாஷ் ஆகிய மூன்று பேரையும் பொலிசார் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் திகதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் மீது 7 வழுக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில்

சுருதி,அவரது தாய் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேசன், சகோதரர் சுபாஷ் ஆகிய நால்வரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்த நான்கு பேருக்கும் தற்போது ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளியே வந்துள்ள நடிகை ஸ்ருதி செய்தியாளர்களை சந்தித்த போது, காவல் அதிகாரிகள் தன்னிடம் விசாரிக்கும் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தங்கள் ஆசைக்கு கட்டுப்படவில்லை எனில் நிர்பயாவை போல பாலியல் துஷ்பிரயோகம் செய்து சாலையில் வீசி சென்று விடுவோம் என கூறி மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட காவல்நிலையத்தின் அனைத்து சிசிடிவி கமெராக்களையும் காகிதத்தை கொண்டு மறைத்து வைத்து தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையாளர் தன்னை அவரது ஆசைக்கு இணங்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் மட்டுமின்றி மேலும் இரண்டு பெண் பொலிசார் பெண் காவலர்களின் ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு எனவும், திருமணம் செய்து கொள்ள மறுத்ததற்காகவே இது போன்ற வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், நாங்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்