கலைஞருக்கு என்ன ஆச்சு? அவரின் தற்போதையை நிலை இதுதானாம்: வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், அவர் வாய் வழியாக சுவாசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாநிதி உடல்நிலை குறித்து நேற்று வெளியான மருத்துவ அறிக்கைக்கு பின்னர் திமுக தொண்டர்கள் பலரும் வருத்தமடைந்தனர். யாரும் அவரை பார்க்க அனுமதிக்காத காரணத்தினால், ஐயாவுக்கு என்ன ஆச்சு? மோசமான நிலையில் இருக்கிறாரா என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்து வந்தது.

இந்நிலையில் கோபாலபுரத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து கருணாநிதியின் உறவினர்கள் கூறுகையில், கடந்த வாரம் கலைஞர் கருணாநிதி ட்ரக்கியோடமி சிகிச்சைக்காகக் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து போகும் போது நினைவு இருந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்த பின்பு அவருக்கு நினைவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், முதுமையின் காரணமாக அறுவை சிகிச்சையைத் தாங்கும் நிலையில் அவரது உடல் இல்லை எனவும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொடுக்கப்படும் மருந்துகளைக்கூட அவர் உடல் ஏற்றுக்கொள்வது கடினம் என்பதால், அவரின் நினைவாற்றல் இல்லாமல் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிப்பதை விட, வீட்டில் வைத்து சிகிச்சையளிப்பது தான் சிறந்தது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து கருணாநிதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். வீட்டிற்கு வந்த முதல் நாளிலிருந்தே படுக்கையிலே இருந்து வருவதாகவும், அரை மயக்க நிலையிலே இருக்கும் அவரால் நுரையீரலில் இருக்கும் சளி காரணமாக இயல்பாக மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

நோய் தொற்று காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அதை குணப்படுத்தவும், சுவாசக் கோளாற்றை சரி செய்யவுமே காவேரி மருத்துவ குழு கோபாலபுரத்திற்கு விரைந்துள்ளனர்.

கலைஞரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், இதயத்துடிப்பு சீராக உள்ளது, உள் உடல் உறுப்புகள் இயக்கத்தில்தான் உள்ளன.

ஆனால், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தாலும், வாய்வழியாகவே அவர் இப்போது சுவாசித்துக்கொண்டிருக்கிறார், செயற்கைச் சுவாசம் தேவைப்பட்டால் அளிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் கருணாநிதியின் குடும்பத்தினர் இயற்கை சுவாசித்திலே இருக்கட்டும் என்று சொல்லியுள்ளதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், கருணாநிதிக்குத் நோய்த்தொற்று இருப்பதால், அவரை யாரும் நேரில் பாரக்க வேண்டாம் என்றும் சொல்லியுள்ளார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்