கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இரு நாட்களுக்கு மட்டுமே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மூன்று நாட்களாக காய்ச்சல் மற்றும் நோய் தொற்றால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென அவரின் ரத்த அழுத்தம் குறைந்தது.
பின்னர் அவர் வீட்டிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், கருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார். அவருக்கு ரத்த அழுத்தம் சீராகிவிட்டது.
கருணாநிதி இன்னும் இரு நாட்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார். அதன் பின்னர் வீடு திரும்புவார் என கூறியுள்ளார்.