மீண்டும் ஒரு சம்பவம்: பிரசவ வலியால் துடித்த மனைவிக்கு சுகப்பிரசவம் பார்த்த கணவர்.... இறந்து பிறந்த குழந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா

காங்கேயம் மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்த காரணத்தால் குழந்தை இறந்து பிறந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரவி (32), மனைவி ராதிகா (27) ஆகியோர் தங்கி, கடந்த 15 நாட்களாக காங்கேயம் மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர். ராதிகா நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு நேற்று காலை 6 மணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

ராதிகாவுக்கு வலி அதிகமானதால் என்ன செய்வதென்று தெரியாமல் கணவர் ரவி, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.

ராதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அருகில் வசிப்பவர்கள் வந்து பார்த்த போது, குழந்தை அழுகாமல், அசைவில்லாமல் அப்படியே இருந்தது. இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு ராதிகா மற்றும் குழந்தை அழைத்து செல்லப்பட்டனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக கூறினர்.

ராதிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காங்கேயம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் திருப்பூர் மாவட்டத்தில் யூடியூப் பார்த்து கணவர் ஒருவர் மனைவிக்கு பிரசவம் பார்த்த காரணத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அப்பெண் இறந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...