துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை கிடந்ததால் பரபரப்பு: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னை அருகே ஊர்ப்பக்கம் பகுதியில் துண்டிக்கபட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனரின் தலை கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கமலக்கண்ணன். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஊர்ப்பக்கம் ரஜீவ்காந்தி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கமலக்கண்ணன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் கமலகண்ணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கமலக்கண்ணனின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட பெண் வீட்டின் முன் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன், கமலக்கண்ணனின் உடல் பகுதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 கிமீ தூரம் வரை சென்ற மோப்ப நாய் நின்றுவிட்டது.

தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், பால்ராஜ் மற்றும் சம்மந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...