வைரலாகும் கருணாநிதியின் திருமண அழைப்பிதழ்!

Report Print Vijay Amburore in இந்தியா

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருடைய திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக அரசியல் தளத்தில் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையினை வெற்றிகரமாக முடித்துள்ள, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இரத்த அழுத்தம் சிறிது குறைந்திருந்தாலும், சிறுநீரக தோற்று இன்னும் குறையாமல் இருப்பதால் காவேரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 1948ம் ஆண்டு ஆம் நடைபெற்ற கருணாநிதியின் திருமண விழா அழைப்பிதழ் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த அழைப்பிதழில், மு.கருணாநிதி, முரசொலி ஆசிரியர், திருவாரூர் என மாப்பிள்ளையின் அறிமுகமும், தயாளு கீதனூர், கே.கோவிந்தசாமி பிள்ளை மகள் என மணமகளின் அறிமுகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களை தொடர்ந்து சொறிபொழிவாளர்கள் என குறிப்பிட்டு, அறிஞர் தளபதி அண்ணாதுரை என்றும், தோழர் டி.பி.சீனிவாசன், என்.எஸ்.இளங்கோ, புலவர் குழந்தையா என முக்கியமான தலைவர்களின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்