கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தொடர் மருத்துவ சிகிச்சையால் அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, கருணாநிதியை இன்று சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

வெங்கய்யா நாயுடுவுடன் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், மு.க ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் புகைப்படத்தில் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...