டிடிவி தினகரன் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: அதிர்ச்சி வீடியோ வெளியீடு

Report Print Raju Raju in இந்தியா

டிடிவி தினகரன் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவர், சமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு இன்று காலை வந்த புல்லட் பரிமளம், அவரது வீட்டின் முன்பு கோஷம் எழுப்பியுள்ளார்

பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் குண்டை எடுத்து வீச முயன்றுள்ளார். இதில் பெட்ரோல் குண்டு வெடித்து விபத்துக்குள்ளானதில் கார் மீது தீ பற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த தினகரன் ஆதரவாளர்கள் பரிமளத்தின் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

அப்போது, புல்லட் பரிமளம், தினகரன் கார் ஓட்டுனர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து காயமடைந்த புல்லட் பரிமளம் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களை தினகரனின் மனைவி அனுராதா சந்தித்து ஆறுதல் கூறினார்.

கார் தீப்பற்றியது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் புல்லட் பரிமளத்தின் கார் ஓட்டுநர் சுப்பையாவை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்