கருணாநிதி ஒரு போராளி: பிரபல நடிகர் புகழாரம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
63Shares
63Shares
lankasrimarket.com

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதி நல்ல உடல்நிலையுடன் தேறி வரவேண்டும் என அனைவரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் இதுதொடர்பாக ட்விட்டர் பதவி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இனி போராளி என்ற வார்த்தை திமுக தலைவர் கருணாநிதிக்கு சொந்தமானது. விடாமுயற்சி எனும் வார்த்தையை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட போதிலிருந்து அவர் கூறுவார்.

அதன்படியே வாழ்ந்தும் வருகிறார். பலரின் உத்வேகம் நீங்கள் ....! வாழ்க்கை குறித்த வேறு ஒரு பரிமாணத்தை எனக்கு நீங்கள் காட்டியுள்ளீர்கள். அன்புக்குரிய தலைவா.... உனக்கு தலைவணங்குகிறேன்..." என்று விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்