கருணாநிதியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர்: பரபரப்பு பேட்டி

Report Print Santhan in இந்தியா

தமிழக முதல்வர் பழனிச்சாமி கலைஞரின் உடலநிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும், சீரான நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று திடீரென்று அவரது உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதால், மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்தனர்.

அதன் பின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டது உண்மை தான், தற்போது கலைஞர் நல்ல படியாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் பற்றி அறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு சென்றனர்.

அவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், சிவி சண்முகம் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தேன், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமாக இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers