உயிரோடு வாழ வேண்டாம் என தற்கொலை செய்த காதல் ஜோடி! அதன் பின் ஐசியூவில் நடந்த ஆச்சரிய சம்பவம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் காதலித்து தற்கொலைக்கு முயன்ற ஜோடிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் திருமணம் நடந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பீரன்வாலி கிராமத்தைச் சேர்ந்தவர் குர்முக் சிங் (23). ஹிசாரில் உள்ள வித்யூத் நகரைச் சேர்ந்தவர் குசம் (22).

இருவரும் ஹிசாரில் உள்ள டிஎன் கல்லூரியில் படித்துவந்தனர். முதலில் நட்பாக பழகிய இவர்கள் நாளைடைவில் காதலர்களாக மாறினர்.

கல்லூரி முடித்த பின்னும் தொடர்ந்தது காதல். குடும்பத்தினருக்குத் தெரியாமல் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்களின் காதல் முதலில் குசம் வீட்டுக்குத் தெரிய வர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மனமுடைந்த காதலர்கள் ஹிசாரில் தேவிபவன் கோயிலுக்கு அருகில் உள்ள சைபர்கேபில் கடந்த 25-ம் திகதி சந்தித்து இனி உயிரோடு வாழ வேண்டாம் என்று முடிவு செய்து, அப்போது கையில் கொண்டு வந்திருந்த பூச்சிகொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

பின்னர் குசன் தனது அண்ணனுக்கு போன் செய்து, நாங்கள் விஷம் குடித்துவிட்டோம். நீங்கள் நன்றாக இருங்கள் என்று கூறிவிட்டு துண்டித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அண்ணன், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருகிலுள்ள மருத்துவமனையில் இருவரையும் சேர்த்தார். அவசர சிகிச் சைப் பிரிவில் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அப்போது இரண்டு குடும்பத்தாரும் மருத்துவமனையில் சந்தித்து கொண்ட போது சண்டை போட்டுக் கொண்டனர்.

உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் சண்டையை நிறுத்தி சமாதானப்படுத்தினர்.

அதன் பின்னர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இரண்டு குடும்பத் தினரும் மனம் மாறினர். உடனடியாக இரண்டு பேருக்கும் திருமணத்தை நடத்தி வைத்துவிடலாம் என முடிவு ஐசியூவில் வைத்தே திருமணத்தை நடத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers