காப்பாற்றுவது கடினம்! கதறி அழுத கனிமொழி- இது நடந்ததே அதிசயம்! பரபர நிமிடங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நேற்று மாலை 5.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக வெளியான தகவலால் பதற்றத்தில் ஆழ்ந்தனர் தொண்டர்கள்.

கருணாநிதி உடல்நிலை குறித்து விரைவில் அறிக்கை வெளியாகும் எனவும் செய்தி பரவியதால், கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் கவலையில் ஆழ்ந்தனர்.

நேற்று இரவு 9.50 மணியளவில் மருத்துவமனை செயல் இயக்குனர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், ' தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது.

ஆனாலும், சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவருடைய உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்தவை குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் கூறப்பட்டதாவது, நேற்று மாலை 5.30 மணியில் இருந்து 7 மணி வரையில் அவரது உடல்நிலையில் பெரும் பின்டைவு ஏற்பட்டது. நாடித் துடிப்பு நாற்பதுக்கும் கீழ் குறைந்துவிட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக 35 வரை சென்றுவிட்டது.

இதனால், அவரைக் காப்பாற்றுவது கடினம் என்ற தகவல் சொல்லப்பட்டது. இதனை ஏற்க முடியாமல் கனிமொழி, செல்வி உள்ளிட்டவர்கள் கதறி அழத் தொடங்கிவிட்டனர். செயல் தலைவர் ஸ்டாலின், கலங்கிய கண்களோடு அமர்ந்திருந்தார். சுவாசிப்பதிலும் கருணாநிதிக்குச் சிக்கல் நீடித்தது.

ஆனால், மருத்துவர்கள் கொடுத்த தொடர் சிகிச்சையின் காரணமாக, 8 மணியளவில் கலைஞரின் உடல்நிலையில் ஏற்றமான சூழல் ஏற்பட்டது. மருத்துவர்களே, உண்மையிலேயே இது அதிசயமான ஒன்றுதான். இத்தனை வயதில் அவரது உடல் ஒத்துழைப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது எனக் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers