"வழக்கை திரும்ப பெறு": கன்னியாஸ்திரியை நாசம் செய்த பாதிரியார் மிரட்டல் ஆடியோ!

Report Print Vijay Amburore in இந்தியா
117Shares
117Shares
lankasrimarket.com

கேரளாவில் பாலியல் தொடர்பான வழக்கு ஒன்றில் சிக்கியுள்ள பாதிரியார் வழக்கினை திரும்ப பெறுமாறு கன்னியாஸ்திரிக்கு மிரட்டல் விடுக்கும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஜலந்தர் டயோசீசனுக்கு கீழ் செயல்படும் கத்தோலிக்க தேவாலயத்தில் மறைமாவட்ட ஆயராக பதவி வகித்து வருபவர் பிரான்கோ முலாக்கல். இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘மிஷனரிஸ் ஆப் ஜீசஸ்’ சபையை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

நாடு முழுவதும் பலத்தை அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக, அனுபமா என்ற கன்னியாஸ்திரி ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அனுபமாவை செல்போனில் தொடர்பு கொண்டு கஞ்சிராப்பள்ளி டயோசீசனில் பாதிரியராக இருக்கும் ஜேம்ஸ் என்பவர் வழக்கை திரும்ப பெறுமாறு மிரட்டல் விடுக்கும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோ பதிவில், பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் எனவும், அப்படி இல்லையென்றால் கெடுபிடிகள் அதிகம் இருக்கும் ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களுக்கு மாற்றி விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

அதற்கு பதிலளித்த அனுபமா, என்ன நடந்தாலும் வழக்கினை திரும்ப பெற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததோடு, இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் மேலும் பரபரப்பை கிளம்பியிருக்கும் நிலையில், வழக்கிற்கு கூடுதல் ஆதாரமாக இது இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்