உலகில் எத்தனை நாடுகளில் கருணாநிதியின் பெயர் தேடப்பட்டுள்ளது தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in இந்தியா

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதியின் பெயர் கூகுளில் சுமார் 5 லட்சத்துக்கும் மேல் அதிகமாக தேடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கலைஞர் என்ற சொல் 2 லட்சத்துக்கும் அதிகமாகவும், கருணாநிதி, காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அன்று ஜுலை 28-ஆம் திகதி 20 ஆயிரத்துக்கும் மேலானோர் காவேரி ஹாஸ்பிட்டல் என்று கூகுளில் தேடியுள்ளனர்.

கலைஞர் என்ற சொல் இந்தியாவுக்கு பின் அதிகம் தேடப்பட்ட நாடுகள் என்றால், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், ஒமன் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் தானாம், தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்த நாடுகளும் ஒன்று.

இதைத் தொடர்ந்து கருணாநிதி என்ற பெயரை உலகில் உள்ள 58 நாடுகளில் தேடியுள்ளனர்.

இந்திய அளவில் பார்த்தால், தமிழ்நாட்டிற்கு பின் அதிகம் தேடிய மாநிலம் என்றால் அது புதுச்சேரி எனவும், அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருணாநிதி என்று மட்டும் தேடாமல், அவரின் பெயரோடு சேர்த்து கலைஞர் ஹெல்த்,கருணாநிதி ஹெல்த் லைவ் அப்டேட், கலைஞர் கருணாநிதி போன்றவைகளும் தேடப்பட்டுள்ளன.

குறிப்பாக காவேரி மருத்துவமனை கலைஞர் கருணாநிதி குறித்து அறிகை ஒன்றை வெளியிட்டிருந்தது, அதில், Transient Setback என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது.

இதையும் இணையவாசிகள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

தமிழகத்தில், திருவள்ளுர் மாவட்டம் மணவாளநகரை அடுத்து கருணாநிதியின் புகைப்படங்கள் அதிகம் தேடப்பட்டது அவரின் சொந்தத் தொகுதியான திருவாரூரில்தானாம், யூடியூப்பில் கருணாநிதி குறித்து வீடியோக்கள் அதிகம் தேடிய மாநிலம் என்றால் அது தமிழ்நாடு எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்