கருணாநிதி மருத்துவமனையில் இருக்காரு எங்களுக்கு பிரியாணி கொடு... திமுக-வினரின் அராஜக வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
95Shares

திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ் சென்னையில் உள்ள ஹொட்டலுக்குள் கூட்டாளிகளுடன் புகுந்து ஊழியர்களை சரமாரியாக குத்தி காயப்படுத்தும் காட்சிகள் வைரலாகியுள்ளது.

கடந்த 28ம் திகதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹொட்டல் பூட்டப்பட்டிருந்த நிலையில், ஷட்டரை திறக்கச் சொல்லி உள்ளே பத்து பதினைந்து கூட்டாளிகளோடு புகுந்த யுவராஜ் சரமாரியாக கேஷியர் முகத்தில் குத்துவிடுகிறார்.

தடுக்க முற்பட்ட கடை ஊழியர்கள் முகத்திலும் குத்துகிறார். அவர் கூட்டாளிகளும் குத்துகிறார்கள்.

இது குறித்து கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், வியாபாரிகள் சங்கம் இந்த சம்பவத்திற்கு எதிராக எங்களுடன், இணைந்துள்ளது. பொலிசார் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர் என கூறியுள்ளார்.

கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், கருணாநிதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை பயன்படுத்திக்கொண்டு, இதுபோன்ற கலாட்டாவில் அவர்கள் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்